யோக மித்ரா, பாரம்பரிய ஹடயோகா பயிற்சிகளை பயிற்றுவிக்க, 2016 ஆம் ஆண்டின் இறுதியில், சரண்யா என்பவரால் நிறுவப்பட்டது.

‘உங்கள் உடல், மனம், சக்தி நிலைகளைக் கொண்டு வாழ்க்கையை உணர்வதற்கான ஒரு தளத்தை உருவாக்கும் அற்புத விஞ்ஞானம் ஹட யோகா ‘ – சத்குரு

சரண்யா, ஒரு MBA பட்டதாரி மற்றும் தனது சொந்த தொழிலை செய்து வருகிறார், இந்நிலையில் ஆரோக்கியம் மற்றும் மன அழுத்தமின்றிய வாழ்க்கையை நோக்கிய பயணத்தில், யோகா அவர் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

தனது அனுபவத்தை உலகிற்கு பகிர்ந்து கொள்ள நினைத்த அவர், சத்குரு அவர்களால் நிறுவப்பட்ட – ஈஷா ஃபவுண்டேஷனில் , ஹட யோகா ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து , 1750 மணி நேர பயிற்சியை மேற்கொண்டார் . மேலும் அதன் வாயிலாக கடந்த ஆண்டு இறுதியிலிருந்து பல துறைகளை சார்ந்த மக்களுக்கு ஹட யோகா பயிற்சிகள் பயிற்றுவித்த அனுபவம் அவருக்கு உண்டு.

எனவே, யோக மித்ராவின் நோக்கமானது, ஹட யோகா பயிற்சிகளை உலகிற்கு கொண்டு சேர்ப்பதின் வாயிலாக மக்களுக்கு ஆழ்ந்த பரிமாணத்தை உணர செய்வதுதான்.