ஜலநேதி
உப்பு நீரை கொண்டு சுவாசக் குழாயை சுத்தப்படுத்தும் பயிற்சிதான் ஜலநேதி ஆகும். இது சுவாசிக்கும் போது எந்த வித இடையூறும் இல்லாமல் நன்றாக சுவாசிக்க உதவுகிறது. சளி, தூசு மற்றும் அழுக்கினால் ஏற்படும் அடைப்புகளால் தடையில்லாமல் காற்று நுரையீரலில் எளிதாக நுழைய உதவுகிறது.
பலன்கள்:
- இது காச நோய், சளி, தூசு மற்றும் அனைத்து கபம் தொடர்பான நோய்களையும் விடுவிக்கிறது. முக்கியமாக நரம்பு மண்டலங்களை சீராக செயல்பட வைக்கிறது.
- நரம்பு மண்டலங்களை அழுத்தமின்றி செயல்பட உதவுகின்றது
- கண், மூக்கு மற்றும் தொண்டை பிரச்சனைகளிலிருந்து காக்க உதவுகிறது.
- அதிகப்படியான சளி மற்றும் மாசுக்களால் ஏற்படும் அடைப்பை வெளியேற்ற உதவுகிறது.
- தூக்கமின்மை மற்றும் மனசோர்வுகளை சரி செய்து நல்ல தூக்கத்தை தருகிறது.
- காச நோய், ஜன்னி, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாசக்குழாய் நோயை தடுக்கிறது.
- ஒற்றை தலைவலி மற்றும் பதட்டத்திலிருந்து விடுவிக்கிறது.
- வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது.