யோகாசனம்
ஆசனா என்பது உடல் இருக்கும் நிலை.
ஆசனப் பயிற்சியின் நோக்கம் உடல்நலம் அடைவது மட்டுமே அல்ல என்றாலும் பயிற்சி மேற்கொள்பவர் பல விதங்களில் உடல்நலம் அடைகிறார். பல நோய்களில் இருந்தும் தன்னைக் காத்துக் கொள்கிறார். இப்படி உடல் அளவிலும் மன அளவிலும் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்கள் கிடைக்கின்றன. மகிழ்ச்சி, அமைதி, உடல் ஆரோக்கியம் போன்றவை கிடைக்கின்றன.
பலன்கள்:
- உங்கள் உடல் மற்றும் மனதை நல்வாழ்வுக்கு கொண்டுச்செல்லும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
- உங்கள் உடல் சுகமாகவும் ஸ்திரமாகவும் வைத்து கொள்ள உதவுகிறது
- ஆசனா உங்களை இயற்கையான தியான நிலைக்கு வர ஒரு தயார்படுத்தும் படிநிலையாக செயல்படுகிறது.
- ஆசனா உங்கள் நினைவுப் பெட்டகத்தை திறந்து, வாழ்க்கையை அதன் உச்ச நிலையை அடைவதற்கு மறு உருவாக்கம் செய்கிறது.