குழந்தைகள் யோகா
குழந்தைகளுக்கான ஹட யோகா பயிற்சிகள் ஒரு தனித்துவம் வாய்ந்த வாய்ப்பாக அமையும். இது குழந்தைகளின் மனதின் மேம்பாட்டிற்கும், நல்வாழ்விற்கும் படிக்கல்லாக அமைகிறது.
பலன்கள்:
- குழந்தை தனக்குள் இருக்கும் இயல்பான ஆனந்தத்தை உணர இப்பயிற்சி வழிவகுக்கும்.
- பல பேர் மத்தியில் திறமையளவில் அவர்கள் உயர்வதை கவனிக்கலாம்.
- குழந்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை கண்டறியவும் அவர்கள் கற்பனைத் திறனை வளர்க்கவும் இது உதவுகிறது.
- இப்பயிற்சியின் மூலம் மனக்கூர்மை, மன ஒருங்கிணைப்பு, உடல் பருமன் குறைதல், ஆஸ்துமா, தலைவலி போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.