உபயோகா

உபயோகா என்பது, ஒருவரின் ஆன்மீக பரிமாணத்தில் அதிகம் சார்ந்திராமல், உடல்நிலை, மனநிலை மற்றும் சக்திநிலையில் சார்ந்துள்ளது. ஒருவர் முழுமையான வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு வழிமுறையாகும்.

பலன்கள்:

  • உபயோகா உடல் சோர்வு மற்றும் அழுத்தத்தை விடுவிக்கிறது.
  • உபயோகா மூட்டு இணைப்புகளில் உயவுத் தன்மையை வழங்குவதோடு சக்தி முனைகளையும் இயக்கச் செய்வதால் உடலின் மற்ற சக்தி மண்டலங்களும் செயல்படத் துவங்குகின்றன.
  • மூட்டுகள் மற்றும் தசைகளை வலுவாக்குகிறது.
  • நீண்ட பயண சோர்வுகளிலிருந்து புத்துணர்வு அளிக்கிறது.