யோகா என்றால் பலபேருக்கு பல விஷயங்களாக இருக்கின்றது. ஆனால் நரகத்திற்குச் செல்வதை தவிர்க்க ஒரு வழி என்பது மட்டும் நிச்சயமான விஷயம். ஏனென்றால் உங்களை நரகத்திற்கு அனுப்பினாலும் ஹட யோகத்திற்கு பிறகு அதை சொர்க்கமாகவே பார்ப்பீர்கள். இதற்குபிறகு உங்களை யாராலும் சித்ரவதை செய்ய இயலாது. இந்த சுதந்திரம் மிகச் சிறியது என்று நினைத்துவிட வேண்டாம். உங்கள் உடல், மனம், சக்தி நிலைகளைக் கொண்டு வாழ்க்கையை உணர்வதற்கான ஒரு தளத்தை உருவாக்கும் அற்புத விஞ்ஞானம் ஹட யோகா. ஆனால் உங்கள் வாழ்க்கை அனுபவங்கள் எவ்வளவு ஆழமாக இருக்கின்றன என்பதுதான் உங்கள் முன் உள்ள கேள்வி.
பாரம்பரிய ஹட யோகா என்பது உங்கள் உடல் மற்றும் மனத்தை தயார் செய்கிறது. அனைத்திற்கும் மேலாக உங்கள் சக்தி நிலையை பலப்படுத்தி, எப்பேர்பட்ட அனுபவத்தையும் தாங்கிக் கொள்ளும் திறத்தை வழங்குகிறது. நீங்கள் வாழ்க்கை என்று எதை அழைக்கிறீர்களோ அவற்றை கையாளும் திறன் படைத்ததாக உங்கள் சக்தி உடல் இருக்கும். – சத்குரு.
யோக மித்ராவின் நோக்கமானது, ஹட யோகா பயிற்சிகளை உலகிற்கு கொண்டு சேர்ப்பதின் வாயிலாக மக்களுக்கு ஆழ்ந்த பரிமாணத்தை உணர செய்வதுதான்.